Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கக் கடன்களில் அதிகரிக்கும் வாராக் கடன்: ஸ்ரீராம் பைனான்ஸ்

தங்கக் கடன்களில் அதிகரிக்கும் வாராக் கடன்: ஸ்ரீராம் பைனான்ஸ்

ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திடம் சுமார் ரூ.9,000 கோடி மதிப்புள்ள தங்கக் கடன்கள் உள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு கணக்கு முடிவுகளின்படி, தங்கக் கடன் பிரிவில் வாராக்கடனும், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிக்கல்களும் அதிகரித்து வருவதாக ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்களும் வணிக நிறுவனங்களும் அதிக அளவில் கடன் வாங்குவதால், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி வளர்ந்து வருகிறது. எனினும், நகைகளை அடமானம் வைத்து வாங்கும் தங்கக் கடன்கள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாத நிலையும் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது.

ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திடம் சுமார் ரூ.9,000 கோடி மதிப்புள்ள தங்கக் கடன்கள் உள்ளன. இதில் 90 நாட்களுக்கு மேலாக தவணை செலுத்தப்படாத வாராக்கடன் விகிதம், இந்த நிதியாண்டில் 2-வது காலாண்டில் 3.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 2.57 சதவீதமாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.28 சதவீதமாகவும் இருந்தது.

முன்னதாக, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 30 நாட்களுக்கு மேல் நிலுவை அதிகமானதால், தனது குறுகிய கால தங்கக் கடன் திட்டத்தையே நிறுத்தியது. அதேபோல் பிரமல் பைனான்ஸ் நிறுவனமும் தங்கக் கடன்கள் அளவுக்கு அதிகமாக வளர்வது ஒரு புதிய ஆபத்து என எச்சரித்திருந்தது. இப்போது அந்த நிறுவனங்களின் வரிசையில் ஸ்ரீராம் பைனான்ஸும் இணைந்துள்ளது.

இதற்கிடையில், செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஆண்டின் 2,307 கோடி ரூபாயிலிருந்து 3,677 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது சந்தை நிபுணர்கள் எதிர்பார்த்த 3,546 கோடி ரூபாயை விட அதிகமாகும். மேலும், இந்நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு 17 சதவீதம் உயர்ந்து 3.29 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

முந்தைய செய்தி
அமெரிக்காவின் 580 மில்லியன் டாலர் ஆர்டரை கைப்பற்றியது வெல்ஸ்பன்
அடுத்த செய்தி
நவம்பர் 1-ல் தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம்

தொடர்புடைய செய்திகள்